ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலில் Smart Gun

Written by vinni   // February 25, 2014   //

smart_gun_002ஜேர்மனின் பிரபல நிறுவனம் ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலில் துப்பாக்கி ஒன்றை தயாரித்துள்ளது.

ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில் உள்ள தொழில் நிறுவனம் ஒன்று “Armatix iP1”என்ற Smart Gun-யை தயாரித்துள்ளது.

ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலில் தயாரான இத்துப்பாக்கியை, அதன் உரிமையாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஏனெனில் இதற்கான ரகசிய குறியீடு, உரிமையாளரின் கைகடிகாரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

கைகடிகாரமும் துப்பாக்கியும் அருகருகே இருந்தால் மட்டுமே துப்பாக்கி செயல்படத் தொடங்கும் என குறித்த நிறுவனத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்துப்பாக்கி தொலைந்து போனாலும் கூட தானாகவே செயலிழந்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

1019 யூரோக்கள் விலையுடைய இத்துப்பாக்கி, அமெரிக்காவில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.


Similar posts

Comments are closed.