சாதித்து காட்டுவாரா கோஹ்லி?

Written by vinni   // February 24, 2014   //

25-virat-kohli56-600இந்திய அணி அன்னிய மண்ணில் தொடர்ந்து சொதப்பி வருவதால், ஆசிய கிண்ணத் தொடரிலாவது அசத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 5 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நாளை தொடங்குகிறது.

இதில் பங்கேற்பதற்காக டோனி தலைமையிலான இந்திய அணி, நேற்று புறப்பட்டு சென்றது.

சமீபத்தில் முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் டோனிக்கு காயம் ஏற்பட்டதால் இந்திய அணியின் அணித்தலைவர் பொறுப்பை வீராட் கோஹ்லி ஏற்றுள்ளார், விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.

இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று மும்பையில் இருந்து வங்கதேசத்திற்கு கிளம்பியது.

இத்தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, இம்முறை மிகவும் இக்கட்டான நிலையில் களமிறங்குகிறது.

‘கேப்டன் கூல்’டோனி இல்லாதது பின்னடைவை ஏற்படுத்தலாம். அன்னிய மண்ணில் சந்தித்த தொடர் தோல்விகள் இவரது தலைமை பதவிக்கு வேட்டு வைக்கலாம்.

இந்தச் சூழலில் அணியை வழிநடத்தும் வீராட் கோஹ்லி சாதித்துக் காட்ட வேண்டும்.

நல்ல பார்மில் உள்ள இவர், சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிரந்தர அணித்தலைவராக கூட நியமிக்கப்படலாம்.

தவான், ரோகித் சர்மா, புஜாரா, ரவிந்திர ஜடேஜா, பின்னி அடங்கிய இளம் பேட்டிங் படை எழுச்சி பெறுவது அவசியம். பந்துவீச்சில் அசத்த முகமது ஷமி, வருண் ஆரோன், அஷ்வின் உள்ளனர்.

இந்திய அணி: வீராத் கோஹ்லி(அணித்தலைவர்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, புஜாரா, அம்பதி ராயுடு, ரகானே, தினேஷ் கார்த்திக், ரவிந்திர ஜடேஜா, அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, வருண் ஆரோன், ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா, ஈஷ்வர் பாண்டே.


Similar posts

Comments are closed.