முடிசூடா மன்னன் முகமது அலியின் கையுறை ஏலம்

Written by vinni   // February 24, 2014   //

mohammed_ali_002பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் கையுறை எட்டு லட்சம் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகியுள்ளது.
விளையாட்டுத் துறையில் ‘The Greatest’ என்ற தகுதியைப் பெற்ற ஒரே வீரர் குத்துச்சண்டை உலகின் முடிசூடா மன்னன் முகமது அலி.

இவர் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற போது, அணிந்திருந்த கையுறையானது எட்டு லட்சம் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

நியூயார்க் நகரில் இடம்பெற்ற ஏலத்தில் தான், இந்த கையுறை விற்பனையாகியுள்ளது.

கிட்டதட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற அந்த சாம்பியன்ஷிப் போட்டியில், காஸ்சியல் கிளே என்று அழைக்கப்பட்ட முகமது அலி, சான்னி லிஸ்டனை வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியிருந்தார்.

வெற்றி பெற்ற பின்னர் துள்ளிக்குதித்த முகமது அலி, “உலகத்தில் சிறந்தவன்” என்றும், உலகத்தை தான் உலுக்கி விட்டதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.