ஜெனிவா கூட்டத் தொடரில் முஸ்லிம்களின் பிரச்சினைகளும் முன்வைக்கப்பட வேண்டும்

Written by vinni   // February 24, 2014   //

United-Nations-Genevaஇலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் சிப்லி பாரூக் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை முன்வைப்பதற்காக கிழக்கு மாகாண சபையின் அங்கும் வகிக்கும் ஒருவர் ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்து கெள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரான அவர், இது தொடர்பான யோசனை ஒன்றை கிழக்கு மாகாண சபையின் சமர்பிக்க உள்ளார்.

இலங்கையின் பிரதான இனங்களாக சிங்களம் மற்றும் தமிழ் மக்கள் மாத்திரமல்லாது, முஸ்லிம் மக்களும் போரினால் பாதிக்கப்பட்டதாக பாரூக் குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.