கோத்தபாயவின் புதிய பாதுகாப்பு வலை!

Written by vinni   // February 24, 2014   //

gothaபாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவிற்கு அமையவே பொலிஸ் திணைக்களம் கைவிரல் அடையாளங்களை பதிவு செய்யும் கணனி மென்பொருளை கொள்வனவு செய்துள்ளது.
இந்த மென்பொருள் மூலம் இலங்கையில் வாழும் சகலரது கைவிரல் அடையாளங்களும் கணனிமயப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் இலங்கையில் உள்ள எந்த நபரின் கைவிரல் அடையாளமாக இருந்தாலும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தான் இருக்கும் இடத்தில் இருந்தவாறே அதனை கணனி மூலமாக பெறமுடியும்.

அதனை பயன்படுத்தி தாம் தேடும் நபர் குற்றவாளியாக இல்லையா என்பதை கண்டறிய முடியும் என பொலிஸ் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கணனி மென்பொருளை பயன்படுத்தி, கைவிரல் அடையாளங்களை பதிவு செய்துள்ள நபர்களின் விபரங்களை மூன்று நிமிடத்திற்குள் பெற முடியும் என பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது.


Similar posts

Comments are closed.