அதிவேகமாக பரவி வரும் வைரஸ்

Written by vinni   // February 24, 2014   //

pig_virus_003கனடாவில் பன்றி வைரஸ் வெகு விரைவாக பரவுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கனடாவின் மொன்றியலின் தென்பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் porcine epidemic diarrhea எனப்படும் பன்றி தொற்றுவைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இது சீனாவிலிருந்து தோன்றியுள்ளதும், இதனால் இளம் பன்றிகள் அதிகளவு பாதிக்கப்படுவதும் தெரியவந்துள்ளது.

இந்த கொடிய வைரஸினால் கியூபெக் மாகாணத்தில் மில்லியன்கணக்கான பன்றி குட்டிகள் அண்மையில் கொல்லப்பட்டதுடன், இதை தடுக்கும் நோக்கில் பண்ணை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைதொடந்து ஒன்ராறியோ, பிறின்ஸ் எட்வேட் ஐலன்ட், மனிரோபா ஆகிய இடங்களிலும் இந்த வைரஸ் பரவியுள்ளது.

எனவே கால்நடை மருத்துவர்களை பண்ணையாளர்கள் தொடர்பு கொண்டு, வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகளை பற்றி பரிசோதித்து தெரிந்து கொள்ள வேண்டும் என கனடிய விவசாய அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனால் மனித சுகாதாரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், பன்றியின் உணவின் ஊடாக பரவியிருக்கலாம் எனவும் கனடிய உணவு பரிசோதனை நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆராய்வதற்கும் குறித்த நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.


Similar posts

Comments are closed.