மக்கள் கஷ்டத்தில்…..சொகுசாக வாழ்ந்த ஜனாதிபதி! புகைப்படங்கள் வெளியானது

Written by vinni   // February 24, 2014   //

ukraine_president_house_005பொருளாதார நெருக்கடியில் நாடே சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும்போது, உக்ரைன் ஜனாதிபதி மிக சொகுசாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

4½ கோடி ஜனத்தொகை கொண்ட உக்ரைன், பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

எனவே இந்த சரிவில் இருந்து மீள ஐரோப்பிய யூனியன் பக்கம் சாய்வதா? அல்லது ரஷியா பக்கம் சாய்வதா? என்ற நிலை ஏற்பட்டது.

ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சோ, ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போட்டார்.

இதற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது, கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த கலவரத்தில் 75 பேர் பலியாகினர்.

உக்ரைனின் அடக்குமுறையை எதிர்த்து சர்வதேச நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் கீவ் நகரில் உள்ள ஜனாதிபதியின் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர், இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

ஆனால் ஜனாதிபதி எங்கிருக்கிறார் என்பது இதுவரையிலும் மர்மமாகவே இருந்து வருகிறது.


Similar posts

Comments are closed.