மாந்தை மனித புதைகுழியில் இருந்து இதுவரை 81 மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

Written by vinni   // February 24, 2014   //

177255614mannar-puthaikuli1திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழியில் இருந்து மேலும் 2 மனித எச்சங்கள் இன்று திங்கட்கிழமை மீடகப்பட்டுள்ள நிலையில் இது வரை 81 மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை 31 ஆவது தடவையாக குறித்த மனித புதை குழியில் அகழ்வு பணிகள் இடம் பெற்ற போது இவை மீட்கப்பட்டுள்ளன.

நீதவான் முன்னிலையில் அனுராத புரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல். வைத்தியரெட்ண தலைமையிலான குழுவினர், பொலிஸார், தொல் பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் இணைந்து இன்று காலை 8.30 மணி தொடக்கம் மாலை 3.30 மணி வரை அகழ்வுப்பணிகளில் ஈடுபட்டனர்.இதே வேளை ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களில் மேலும் 11 எலும்புக்கூடுகள் இன்று மீட்கப்பட்டு பெட்டிகளில் பொதி செய்யப்பட்டு நீதவானின் உத்தரவிற்கமைவாக மன்னார் பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இது வரை கண்டு பிடிக்கப்பட்ட 81 மனித எச்சங்களும் மீட்கப்பட்டு பொதி செய்யப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகர்பாக வைக்கப்பட்டுள்ளதன.

-குறித்த அகழ்வுப்பணிகள் இன்று திருத்தி வைக்கப்பட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி (3-02-2014) 32 ஆவது தடவையாக மன்னார் நீதவான் முன்னிலையில் மீண்டும் தொண்டப்படவுள்ளது.


Similar posts

Comments are closed.