தங்கமீனை சாப்பிட்டுருச்சு! சித்ரவதை செய்து பூனையை கொன்ற பெண்

Written by vinni   // February 24, 2014   //

woman_killed_cat_002லண்டனை சேர்ந்த இளம்பெண், பூனையை மைக்ரோ ஓவனில் போட்டு சூடேற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனை சேர்ந்த லாரா கன்லைப்(வயது 23) என்ற இளம்பெண் வீட்டில் ஆசை ஆசையாக வாஸ்து தங்கமீன்களை வளர்த்து வந்தார்.

அத்துடன் மாவ்கிலி என்ற பூனை ஒன்றையும் வளர்த்து வந்துள்ளார்.

அந்த பூனைக்கு வயது 4 மாதம் தான் ஆகிறது, இந்நிலையில் அந்த பூனையானது ஒரு தங்கமீனை கடித்து தின்று விட்டது.

இதனால் கோபமடைந்த லாரா, அந்த பூனையை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சுவிட்சை ஆன் செய்து விட்டார்.

ஒரு சில நிமிடங்களில் திறந்துவிட்டார் என்றாலும், பூனை கருகிவிட்டது.

வெளியே எடுத்தபின் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பூனை பரிதாபமாக உயிரிழந்தது.

இதனையடுத்து லாரா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.