பீட்சா கடையில் அரங்கேறிய கூத்து…. சமையலறை சிங்க்கில் சிறுநீர் கழித்த ஊழியர்!…

Written by vinni   // February 22, 2014   //

pizza_toilet_001.w245அமெரிக்காவில் சமையலறையின் சிங்க்கில் ஊழியர் ஒருவர் சிறுநீர் கழித்து விட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மேற்கு விர்ஜீனியாவில் சார்ஸ்ன் நகரில் பீட்சா கடை ஒன்று உள்ளது. இந்த கடையை சேர்ந்த ஊழியர் ஒருவர் சமையலறையின் சிங்க்கில் சிறுநீர் கழித்து விட்டார்.

இந்த செயல் ரகசிய கமெராவில் பதிவானதால், உடனடியாக அவரை டிஸ்மிஸ் செய்து விட்டனர். இந்த கொடுமை என்னவென்றால் சிறுநீர் கழித்தவர் அந்த கடையின் மேனேஜர் என்பதுதான்.

இதுகுறித்து பீட்சா நிறுவன செய்தித் தொடர்பாளர் டோக் டெர்பர் கூறுகையில், இந்த வீடியோ காட்சியைப் பார்த்ததும் அந்த ஊழியர் நீக்கப்பட்டு விட்டார், கடையும் காலவரையின்றி மூடப்பட்டு விட்டது என்று தெரிவித்துள்ளார்.


Comments are closed.