புதிய வகை மலேரியா வைரஸ் கிருமிகள் : ஆப்பிரிக்க மனித குரங்குகளில் இருந்து பரவ‌ல்

Written by vinni   // February 22, 2014   //

worker_inselt_gorilla_001மலேரியா நோய் கொசுக்கள் மூலம் பரவுகின்றன. ஆனால் தற்போது புதிய வகை மலேரியா வைரஸ் கிருமிகள் ஆப்பிரிக்காவில் உள்ள மனித குரங்குகளில் இருந்து பரவி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் முடித்து விட்டு ஐரோப்பா திரும்பிய பயணி ஒருவர் கடுமையான மலேரியாவால் அவதிப்பட்டார். அவரை பரிசோதனை நடத்தியதில் புதிய வகையான ‘பிளாஸ்மோடியம் விவாஸ்’ என்ற வைரஸ் கிருமி தாக்கியது தெரிய வந்தது.

இது குறித்து பென்சில் வேனியா பல்கலைக் கழகத்தில் உள்ள பேரல்மான் மருத்துவ பள்ளியின் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதில் மனிதர்களின் உடலில் 5 வகை பிளாஸ் மோடியம் வைரஸ்கள் மலேரியாவை உருவாக்கும்.

அவற்றில் பி விவாஸ் எனப்படும் பிளாஸ்மோடியம் விவாஸ் வைரஸ் கிருமி மூலம் ஐரோப்பிய சுற்றுலா பயணிக்கு மலேரியா தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வைரஸ் கிருமிகள் ஆப்பிரிக்காவின் அடர்ந்த வனப்பகுதிகளில் வாழும் மனித குரங்குகளின் உடலில் உள்ளது. அவற்றின் மூலம் மனிதர்களுக்கும் பரவி நோய் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலேரியா நோயை பரப்பும் வைரஸ்களில் இது மிகவும் கடுமையானது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தற்போது இதன் மூலம் ஏற்படும் மலேரியா ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டுமே பரவி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.