ஜெனிவா பற்றி கூறினால் ஜனாதிபதி மூலம் எதனையும் செய்து கொள்ள முடியும் -அமைச்சர் தொண்டமான்

Written by vinni   // February 22, 2014   //

mahinda rajapakshaஜனாதிபதியிடம் ஊடாக எதனையாவது செய்து கொள்ள வேண்டுமாயின் ஜெனிவா பற்றி கூறினால் அவர் எதை வேண்டுமானாலும் செய்து கொடுப்பார் என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கூறியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

அமைச்சர் ஒருவர் நேற்று அதிகாலை தன்னை தொடர்பு கொண்ட போதே தொண்டமான் இதனை கூறியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கம்பளங்களை விரித்து வருமாறு அழைத்தாலும் வாரத ஜனாதிபதி , ஜெனிவாவில் வெல்ல பூஜை ஒன்றை நடத்துவோம் வாருங்கள் எனக் கூறியதும் அதிகாலையிலேயே புறப்பட்டு கொட்டகலைக்கு வந்ததாகவும் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் தொண்டமானை நேற்று அதிகாலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர் ஒருவர், தொண்டா … எங்களுக்கும் நேரம் சரியில்லை. ஏன் எங்களை அந்த பூஜைக்கு அழைக்கவில்லை என வினவியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் தொண்டமான், நீங்கள் ஒரு தொலைபேசி அழைப்பை எடுத்தால் வந்து விடுவீர்கள். தலைவரை அவ்வாறு இலகுவாக அழைத்து வர முடியாது தானே. ஆனால் தற்போது ஜெனிவா பற்றி கூறினால் தலைவர் மூலம் எதனையும் செய்து கொள்ள முடியும். நீங்கள் பூஜைகளை நடத்துங்கள், தலைவர் வேண்டியதை செய்து தருவார் எனக் குறிப்பிட்டதாக அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் தொண்டமான் ஏற்பாடு செய்திருந்த ஜெனிவா பேய் நடன பூஜையில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று கொட்டகலை பிரதேசத்திற்கு சென்றிருந்தார்.

அமைச்சர் தொண்டமான் இந்தியாவில் உள்ள தனது நண்பர் ஒருவர் ஊடாக கேரளாவில் இருந்து 9 மந்திரவாதிகளை இந்த பூஜைக்கு வரவழைத்திருந்தார்.


Similar posts

Comments are closed.