பாதுகாப்பு அமைச்சுக்குள்ளேயே கோத்தாவுக்கு எதிரான ‘உளவாளி‘

Written by vinni   // February 22, 2014   //

kottapayaசிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் சிறிலங்காவின் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்சவுக்கு எதிராக, இணையத்தளங்களில் பரப்புரைகளை மேற்கொள்ளப்பட்டு வந்த பரப்புரைகளின் பின்னணியில் இருந்தவரை சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இவர் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவரின் சகோதரர் ஆவார்.

இவர், சிறிலங்கா அதிபர் மற்றும், அவரது குடும்பத்தினர் பற்றிய தகவல்களை சட்டவிரோதமாக, பெற்று தமது பரப்புரைக்கு பயன்படுத்தியுள்ளார்.

பொறளையில், விளம்பர முகவர் நிலையம் ஒன்றை நடத்தி வரும் இவர், தமது சகோதரியைப் பயன்படுத்தியே சட்விரோதமாக தகவல்களைப் பெற்று பல்வேறு போலியான இணையத்தளங்களுக்கு வழங்கியுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போர்க்காலத்தில், பல்வேறு இணையத்தளங்கள் மூலம், பல்வேறு பிரமுகர்களினது நற்பெயரைக் களங்கப்படுத்தும் வகையில் இவர் பரப்புரைகளை மேற்கொண்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Similar posts

Comments are closed.