மனித உயிர்களுக்கு மதிப்பில்லை

Written by vinni   // February 21, 2014   //

download (1)இந்தியா, சீனா போட்டிப் போட்டுக் கொள்வது ஆசிய கண்டத்திற்கு நல்லதல்ல என புத்தமதத் தலைவரான தலாய்லாமா கூறியுள்ளார்.

இருவார சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் புத்தமதத் தலைவரான தலாய் லாமா.

அங்கு செய்தியார்களிடம் பேசுகையில், இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக்கொள்வது ஆசிய கண்டத்திற்கு மட்டுமின்றி திபெத்தியர்களுக்கும் நல்லதல்ல.

பரஸ்பர நம்பிக்கை அடிப்படையிலான நல்ல உறவுகள், சீனா மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியம்.

அதேபோல் கல்வி மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கும் இது முக்கிய பங்காற்றும்.

தற்போது சீனாவின் ஜனாதிபதியாக இருக்கும் ஸி ஜின்பிங், ஊழலை எதிர்த்து தைரியத்துடன் சிறப்பாக செயலாற்றக் கூடியவர், ஆனால் தணிக்கை முறை பரவலாக நடைபெற வேண்டும்.

சீனாவில் உண்மையான வளர்ச்சி என்பது, கிராமப்புற பகுதிகளில்தான் ஏற்பட வேண்டும். இதன் பொருள் நகரங்களை உருவாக்குவது அன்று.

சுதந்திரம், ஜனநாயகம், விடுதலை ஆகியவையே அமெரிக்காவின் கொள்கைகளாகும்.

ஆனால் ஆப்ரிக்கா, சிரியா போன்ற நாடுகளில் நீதிக்கொள்கைகள் இல்லாத காரணத்தினால் மனித உயிர்களுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.

நீதிக்கொள்கையினை இழந்துவிட்டால் எந்தவொரு நாட்டிற்கும் வளமான எதிர்காலம் இல்லை.

மேலும் இந்தியா மற்றும் இங்கிலாந்தில் காலநிலைகள் வேறுபடுகின்றன.

ஆராய்ச்சியாளர்கள் காலநிலை மாற்றத்தால் முன்னெப்போதும் இல்லாத வகையில் வடதுருவம் உருகுவதாக கூறுகின்றனர், நாம் அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.