விஸ்வரூபம் எடுத்துள்ள ஆபாச பட விவகாரம்! பிரதமர் ஆலோசனை

Written by vinni   // February 20, 2014   //

sebastian_edathy_002ஜேர்மனியில் ஆபாச பட விவகாரம் தொடர்பில் கட்சி தலைவர்களுடன், பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் ஆசோசனை நடத்தியுள்ளார்.

கனடாவை சேர்ந்த கும்பல் ஒன்று, சிறார்களை தங்கள் வலையில் வீழ்த்தி ஆபாச படம் எடுத்து விற்று வருவது கடந்த 2010ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கும்பலுக்கு ஜேர்மனி உள்பட 94 நாடுகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து விசாரணை நடத்தியதில், ஜேர்மனியில் மட்டும் 800க்கும் மேற்பட்ட நபர்கள் வாடிக்கையாளர்களாக இருப்பதாகவும், இவர்களின் செபாஸ்டியன் எடாத்தி(வயது 44) என்ற நாடாளுமன்ற உறுப்பினரும் அடங்குவார் என்பது தெரியவந்தது.

ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமூக ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் செபாஸ்டியன் எடாத்தி.

தன் மீதான குற்றச்சாட்டுக்களை செபாஸ்டின் இடாத்தி தொடர்ந்து மறுத்து வந்தாலும், கடந்த 8ம் திகதி பதவியை ராஜினாமா செய்தார்.

இருப்பினும் இந்த ஆபாச பட விவகாரம் ஓய்வதாக இல்லை, இது பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் நேற்று தனது கூட்டணி கட்சி தலைவர்களான ஹோர்ஸ்ட் சீஹோபர், சிக்மர் காபிரியேல் ஆகியோருடன் 3 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.

இதில் ஆபாச பட விவகாரம் குறித்து அவர் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது, எனினும் அதன் விபரங்கள் வெளியாகவில்லை.


Similar posts

Comments are closed.