அமெரிக்காவில் மோடிக்கு எதிரான விசா மறுப்பு தீர்மானம் வாபஸ்

Written by vinni   // February 20, 2014   //

பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்கு எதிரான விசா எதிர்ப்பு தீர்மானத்தை அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி எம்.பி. ஸ்காட் பெர்ரி வாபஸ் பெற முடிவு செய்துள்ளார். மோடிக்கு எதிரான இந்த தீர்மானத்தை வாபஸ் பெறும் இரண்டாவது எம்.பி. இவர் ஆவார்.

visaமோடிக்கு விசா வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து “நாடாளுமன்ற தீர்மானம் 417′ என்ற பெயரில் புதிய தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை ஆதரித்து அந்நாட்டு எம்.பி.க்கள் 42 பேர் கையெழுத்திட்டு இருந்தனர். அந்நாட்டின் வெளிவிவகாரக் கமிட்டியில் முக்கியப் பங்கு வகிக்கும் ஜனநாயகக் கட்சி எம்.பி.யான ஸ்காட் பெர்ரியும் குடியரசுக் கட்சி எம்.பி.யான ஸ்டீவ் சாபோட்டும் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்து இருந்தனர்.

இவர்களில் ஸ்டீவ் சாபோட், ஏற்கெனவே மோடிக்கு விசா வழங்குவதை எதிர்க்கும் தீர்மானத்தை வாபஸ் பெற்றார். சமீபத்தில் குஜராத்தில் நரேந்திர மோடியை இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் நான்சி பாவெல் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பிற்குப் பின்னர் தற்போது ஸ்காட் பெர்ரியும் விசா எதிர்ப்பு தீர்மானத்தை வாபஸ் பெற முடிவு செய்து இருப்பதாக இந்து அமெரிக்க அறக்கட்டளையின் இயக்குநர் ஜே கன்சாரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜே கன்சாரா கூறுகையில், “”மோடிக்கு எதிரான தீர்மானம் தவறானது என்பதை காங்கிரஸ் உறுப்பினர்கள் உணர்ந்துள்ளனர்” என்றார்.


Similar posts

Comments are closed.