வடக்கு மாகாண சபையின் ஆறாவது அமர்வில் 29 பிரேரணைகள் நிறைவேற்றப்ப​ட்டுள்ளது!

Written by vinni   // February 18, 2014   //

Northern_Province-298x212வடக்கு மாகாண சபையின் ஆறாவது அமர்வில் 29 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதுகாணி அபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றம் உள்ளிட்ட பிரேரனைகள் அடங்குகின்றது.

வடக்கு மாகாண சபையின் ஆறாவது அமர்வு சபையின் தவிசாளர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையின் கைதடியிலுள்ள மாகாண சபைக் கட்டிடத்தில் இன்று காலை நடைபெற்றது.

இதன் போது சபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றுமு; எதிர்க்கட்சியாபன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களினால் கொண்டு வரப்பட்ட 29 பிரேரனைகள் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

குறிப்பாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் புர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதையும் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் நோக்கிலான திட்டமிட்ட குடியேற்றத்தையும் கண்டித்து இதனைத் தடுதது நிறுத்த வேண்டுமென்ற பிரேரனை சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் து.ரவிகரனால் கொண்டு வரப்பட்டு நிறைவேஙற்றப்பட்டது.

இராமேஸ்வரத்திற்கும் தலை மன்னாருக்குமிடையிலான கப்பபல் போக்குவரத்து மீள ஆரம்பிக்கச் செய்தல். புலாலி விமானத் தளத்தை டந்த 1980 ஆண்டுகள் போன்று பொத மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்படல் வேண்டும் என்ற இரண்டு பிரேரணைகளையும் சபையின் உறுப்பினர் சர்வேஸ்வரனால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

வடக்கில் இரானுவத்தினர் வசமுள்ள விவசாயப் பண்ணைகள் விடுவிக்கப்பட்டு மாகாண சபையின் ஆளுகைக்குள் n காண்டு வரப்பட வேண்டுமென்ற பிரேரனை உறுப்பினர் அனந்தி சசிதரனால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள முன்று பாடசாலைகளுக்கு அமெரிக்கா தூதரக உதவியுடன் அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சர் அனுமதி வழைங்கியிருந்த நிலையிலும் அமைச்சராவை நிராகரித்துள்ளது. இதனால் ஐனாதிபதி கவனத்திலெடுத்து மாகாண கல்விக்கு உதவ வேண்டுமென்று அவைத் தலைவர் சிவஞானத்தால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். இதற்கு வடக்கு முதலமைச்சர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டு இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்வை ஏற்படுத்த வேண்டும். அத்தோடு வடக்கு மாகாணத்ரதை பிரதிபலிக்கும் வகையில் தபால் அமைச்சருடன் கலந்துரையாடி அங்சல் முத்திரை வெளியிட வேண்டும் இந்த இரண்டு பிN ரரனைகள் சபையின் எதிர்கட்சித் தலைவர் கமலேந்திரால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்தகைய பிரேரணைகள் உள்ளிட்ட 29 பிரேரனைகள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டள்ளது. இதில் ஆளும் கட்சியால் 27 பிரேரனைகளும் எதிர்க்கட்சியால் இரண்டு பிரேரனைகளும் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த மாதம் 18 ஆம் திகதி வரை சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.