முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை ரத்து

Written by vinni   // February 18, 2014   //

Rajiv Gandhiமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இதில் காலதாமதமாக முடிவு எடுத்ததால் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் 3 பேர் சார்பிலும் மனுதாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி, யுக்முத் சவுத்திரி ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார் லூத்ரா வாதாடினார். இருதரப்பு வாதமும் முடிவடைந்த நிலையில், திகதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், அவர்களின் தூக்குத் தண்டனை ஆயுள்தண்டனையாக குறைத்தும் உத்தரவிட்டது.


Similar posts

Comments are closed.