குழந்தையை தவிக்க விட்டு “பாரில்” ஆட்டம் போட்ட தாய்

Written by vinni   // February 18, 2014   //

mum_leaves_toddler_001பிரான்சில் மூன்று வயது குழந்தையை தவிக்க விட்டுவிட்டு பாருக்கு சென்ற தாயின் அலட்சிய செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் முல்ஹவுஸ்(Mulhouse) நகரில் நேற்று முன்தினம், மூன்று வயது குழந்தையின் தாய்(22) குழந்தையை வீட்டில் தனியாக விட்டுவிட்டு நண்பர்களுடன் பாருக்கு சென்றுள்ளார்.

தாய் சென்ற சிறிது நேரத்திலேயே குழந்தை அழத்தொடங்கியதால் அக்கம் பக்கத்தினர் பொலிசாரிடம் புகார் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற பொலிசார் குழந்தையை மீட்டதுடன், குழந்தையின் தாயார் இருக்கும் இடத்தை அறியும் நோக்கில், அவரது தொலைபேசிக்கு தொடர்புக் கொண்டுள்ளனர்.

ஆனால் பலமுறை அழைத்தும் அவர் அழைப்பினை ஏற்கவில்லை. இந்நிலையில் வெகு நேரங்களித்து வீடு திரும்பிய அவர், தன் குழந்தை வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சியுற்றதால் பொலிசாரிடம் புகார் கொடுக்க சென்றுள்ளார்.

இதுகுறித்து பொலிசார் இவரிடம் விசாரணை செய்த போது, தான் அமர்த்திய குழந்தை பராமரிப்பாளர் சரியாக குழந்தையை பார்த்துக்கொள்ளாமல் சீக்கிரம் வீடு திரும்பியதாக கூறியுள்ளார்.

எனினும் இதை நம்பாத பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனைதொடர்ந்து தாம் குடிபோதையில் பாரில் படுத்துறங்கியதாக குற்றத்தை ஒப்புகொண்டதால், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூன்று குழந்தைகளை தவிக்கவிட்டு தாயார் ஒருவர் வெளியே சென்ற சம்பவம் நடந்தது குறிப்பிடதக்கது.


Similar posts

Comments are closed.