நவநீதம்பிள்ளையின் கோரிக்கையை நிராகரித்த இலங்கை அரசு!

Written by vinni   // February 18, 2014   //

navaபோரில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூர இடமளிக்க வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. உலகில் எந்த நாடும் பயங்கரவாதிகளை நினைவுகூர இடமளிப்பதில்லை எனவும் அவரது கோரிக்கை புலிகளின் பயங்கரவாதத்திற்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வமான அங்கீகாரம் என அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் நேற்று கூறியதாக திவயின தெரிவித்துள்ளது.

போரில் கொல்லப்பட்ட புலிகளை நினைவுகூர அரசாங்கம் இடமளிப்பதில்லை என மனித உரிமை ஆணையாளரை யாழ்ப்பாணத்தில் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் புலிகளின் ஆதரவாளர்களும் தெரிவித்தனர். அமெரிக்கா அல்-குவைதா பயங்கரவாதிகளையும் இந்திய காஷ்மீர் பயங்கரவாதிகளை நினைவுகூர தடைவிதித்துள்ளன. அதேவேளை போரில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர தேசிய தினம் அறிவிக்கப்பட வேண்டும் என்ற நவிபிள்ளையின் கோரிக்கையையும் அரசாங்கம் நிராகரித்துள்ளது எனவும் திவயின குறிப்பிட்டுள்ளது.

போரில் கொல்லப்பட்ட சகலரையும் நினைவு கூரக் கூடிய தேசிய தினம் ஒன்றை அறிவிக்க வேண்டும் என்றே ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கோரியுள்ளார். எனினும் அவர் விடுதலைப் புலிகளை நினைவு கூர இடமளிக்கப்பட வேண்டும் என கூறவில்லை. ஆனால் திவயின போன்ற ஆரச ஆதரவு சிங்கள தேசிய பத்திரிகைகள் உண்மைக்கு புறம்பான செய்திகளை பிரசுரித்து சிங்கள மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாடுகளை ஏற்படுத்தி வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.