பாகிஸ்தானில் இராணுவப்படை வீரர்களின் தலையை துண்டித்த தலிபான்கள்

Written by vinni   // February 18, 2014   //

thalipanபாகிஸ்தானில் எல்லை இராணுவப் படையை சேர்ந்த 23 வீரர்களின் தலையை துண்டித்து தலிபான்கள் கொலை செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் செயல்படும் தெஹ்ரிக் இ தலிபான்களின் ஒரு பிரிவினரான முகமது ஏஜென்சி நேற்று முன்தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், கடந்த 2010ம் ஆண்டில் கடத்திய எல்லை இராணுவப் படையை சேர்ந்த 23 வீரர்களின் தலையை துண்டித்து கொலை செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிச்செய்யப்படாத பட்சத்தில், 23 பேரை கொலை செய்ததற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிட உள்ளதாக முகமது ஏஜென்சி அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் அரசுடன், தலிபான்களின் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், இந்த வீடியோ விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Similar posts

Comments are closed.