திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இருந்து மேலும் 3 எலும்புக்கூடுகள் மீட்பு – 67 ஆக அதிகரிப்பு

Written by vinni   // February 18, 2014   //

177255614mannar-puthaikuli1திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழியில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை மேலும் 3 மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இது வரை மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அனுராத புரம் சட்ட வைததிய நிபுணர் டி.எல். வைத்தியரெட்ண தலைமையில் 25 வது தடவையாக இன்று செவ்வாய்க்கிழமை குறித்த மனித புதை குழியின் அகழ்வுப்பணிகள் இடம் பெற்றது. இதன் போது மேலும் 3 மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.

-இந்த நிலையில் இன்று வரை மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளின் தொகை 67 ஆக அதிகரித்துள்ளது. -மேலும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளில் மேலும் 6 எலும்புககூடுகள் இன்று மீட்கப்பட்டு பொதி செய்யப்பட்டு மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதுவரையில் 47 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு பொதி செய்யப்பட்டு மன்னார் வைததியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

-இதே வேளை நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணியின் போது அடையாளம் காணப்படாத தடையப்பொருள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.குறித்த தடையப்பொருள் நாணயம் அல்லது பென்ரன் ஆக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

-இந்த நிலையில் குறித்த தடையப்பொருளினை மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் புலனாய்வுப்பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மீண்டும் நாளை 26 ஆவது தடவையாக மன்னார் நீதவான் முன்னிலையில் குறித்த மனித புதைகுழி தோண்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.