மின்சார கதிரை கதை’ வாக்குகளைப் பெறுவதற்காக கூறப்படும் பொய் – சந்திரிக்கா குமாரதுங்க

Written by vinni   // February 17, 2014   //

santhirikaமின்சார கதிரை கதை’ வாக்குகளைப் பெறுவதற்காக கூறப்படும் பொய் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டராநாயக்கா குமாரதுங்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் ஸ்தாபகர் விஜய குமாரதுங்கவின் 26ஆவது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டராநாயக்க குமாரதுங்க. விஜய குமாரதுங்கவின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்துக்கொண்டிருந்தனர்.

இதேவேளை சர்வதேச அழுத்தத்தின் ஊடாக மின்சார கதிரையில் அமர்த்துவதற்கான முயற்சி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி அந்த இடத்திலிருந்து வெளியேற முற்பட்ட போது ஊடகவியலாளர்கள் வினவினர்.

சர்வதேசம் தொடர்பில் தனக்கு நன்றாக தெரியும் எனக் குறிப்பிட்ட சந்திரிக்கா சர்வதேசத்துடன் மிக பெரிய தொடர்பும் தனக்குண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதுத் தொடர்பில் நான் எந்த விடயமும் இதுவரை அறியவில்லை. அது வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக கூறப்படும் பொய்யாகும். சர்வதேசத்தில் இடம்பெறும் விடயங்கள் குறித்து எமக்கு நன்றாக தெரியும். அவ்வாறு ஒன்றும் இல்லை என் சந்திரிகா தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.