யாழில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவரின்றி நடைபெற்ற விசாரணைகள்!

Written by vinni   // February 17, 2014   //

indian_team_jaffna_visitகாணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணஹமவின் பங்கேற்பின்றி யாழ்ப்பாணத்தில் ஆணைக்குழுவின் விசாரைணகள் இடம்பெற்று வருகின்றது.

கடந்த 1990 ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வடக்கில் காணாமற்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவென ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகள் யாழ்.மாவட்டத்தில் இன்றுடன் நான்காவது நாளாக தொடந்து இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமான இந்த விசாரணைகளின் சாட்சியமளிப்புகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது 10.55 மணியளவில் 17வது நபரின் விசாரணைகள் முடிவடைந்த போது ஆணைக்குழுவின் தலைவர் உடல்நலம் குறைவாகவுள்ளதாக கூறிவிட்டு விசாரணைகளிலிருந்து வெளியேறினார்.

தற்போது இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் குறித்த ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது.

இதுவரை இடம்பெற்ற விசாரணைகளில் இராணுவத்தினருக்கு எதிராகவே அதிகளவான சாட்சியங்கள் பதியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.