இளம் வீராங்கனையை மணந்த ரஷ்ய அதிபர்

Written by vinni   // February 17, 2014   //

viladiminpitir_jimnastick_003ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையை திருமணம் செய்து விட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் பிரபல ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபயேவாவை(30) என்ற பெண்ணுடன், புடினுக்கு ஏற்கனவே ரகசிய உறவு இருந்ததாகவும், சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் அலினாவின் வலது கை விரலிலும், புடினின் வலது கை விரலிலும் திருமண மோதிரங்கள் ஜொலிக்கின்றன.

இந்நிலையில் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸி நவலானிதான், தனது டுவிட்டர் பக்கத்தில், புடினும்- அலினாவும் வல்தாயில் உள்ள இவெர் மானஸ்டரியில் திருமணம் செய்து கொண்டது தொடர்பாக தமக்கு தகவல் வந்தது என கூறியுள்ளார்.

அதற்கற்ப கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சர்வதேச மாநாட்டுக்காக வல்தாய் நகரில் புடின் முகாமிட்டிருந்ததால், அச்சமயத்தில் திருமணம் நடந்தேறியதாக கருதப்படுகிறது.

ஆனால் இச்செய்தியை ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் முற்றிலுமாக மறுத்துள்ளது.

மேலும் கடந்தாண்டு யூன் மாதம் தனது மனைவி, லுட்மிலாவை விட்டுப் பிரிவதாக புடின் அறிவித்திருந்தது குறிப்பிடதக்கது.


Similar posts

Comments are closed.