180 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை

Written by vinni   // February 17, 2014   //

sri-lanka-cricket-logoஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 40 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதன்படி இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

டாக்காவில் இடம்பெற்றும் இன்றைய போட்டி மழை காரணமாக 43 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இலங்கை அணி சார்பாக திசார பெரேரா ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களையும் சேனாநாயக்க 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். ஏனைய வீரர்கள் துடுப்பாட்டத்தில் சிறப்பிக்கவில்லை.

பங்களாதேஷ் அணி சார்பாக ருபேல், சக்பில் அல் ஹசன் மற்றும் அரபட் சனி ஆகிகோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளனர்.


Similar posts

Comments are closed.