கோத்தபாயவுக்கு எதிராக தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு

Written by vinni   // February 17, 2014   //

gothaபாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐ.தே.கட்சியின் தலைமைத்துவச் சபைத் தலைவர் கரு ஜயசூரிய தலைமையிலான பிரதிநிதிகள், தேர்தல் ஆணையாளரிடம் இன்று முறைப்பாடு செய்தனர்.

கரு ஜயசூரிய, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவர் ரவி கருணாநாயக்க மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையாளரை சந்தித்து இந்த முறைப்பாட்டை செய்தனர்.

அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகள் பகிரங்கமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. எனினும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இந்த விதிமுறையை மீறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

அவர், ஆளும் கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியின் முதன்மை வேட்பாளர் உதய கம்மன்பிலவின், ஆரம்ப தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஐக்கிய தேசியக் கட்சியின் இன்று இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவை சந்தித்து விட்டு வெளியில் வந்த கரு ஜயசூரிய, பாதுகாப்புச் செயலாளர் தவறிழைத்துள்ளதை தேர்தல் ஆணையாளர் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.