இலங்கையை அமெரிக்கா புரிந்து கொள்ளவில்லை

Written by vinni   // February 17, 2014   //

g.l.peris_இலங்கை போருக்கு பின்னர் அடைந்துள்ள முன்னேற்றத்தை அமெரிக்க அரசாங்கம் உரிய முறையில் புரிந்து கொள்ளவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதனை அந்நாட்டின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் அண்மையில் தன்னிடம் கூறியதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் மூன்றாவது முறையாகவும் அமெரிக்கா இலங்கைக்கு எதிரான பிரேரணையை கொண்டு வருகிறது.

குற்றச்சாட்டுக்களை சுமத்தி கொண்டு வரப்படும் இந்த பிரேரணை காரணமாக இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் காணப்படும் தொடர்புகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் நியாயமானவை அல்ல. அவை குற்றச்சாட்டுக்கள் மட்டுமே என்ற போதிலும் அமெரிக்கா அந்த குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டவை போல் செயற்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.