பூமியை நெருங்கும் ஆபத்து

Written by vinni   // February 17, 2014   //

kosmos-1220_002செயலிழந்து போன ரஷ்யாவின் ராணுவ செயற்கைக்கோளான காஸ்மோஸ்-1220 பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக ரஷ்ய விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விண்கலம் பூமியை நெருக்கும் அதனுடைய இயக்கம் கட்டுப்பாடற்று இருக்கும் என்று கர்னல் அலெக்சி சொலோடுகின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த 1980ஆம் ஆண்டு இந்த செயற்கைக்கோள் சிக்லோன்-2 என்ற விண்கலம் மூலம் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

மூன்று டன் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் காற்று மண்டலத்தில் நுழையும்போதே பெரும்பான்மையான பகுதிகள் எரிந்துவிடும் என்று கூறப்பட்டபோதிலும், அதன் மிச்ச பகுதிகள் கீழே விழும்போது பூமியின் மேற்பரப்பை பாதிக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பசிபிக் பெருங்கடலில் இவை விழக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் வெளிப்புறக் காரணங்களால் இவை விழும் நேரமும், இடமும் மாறுபடக்கூடும் என்று சொலோடுகின் கூறுகின்றார்.

பூமியின் பெரும்பகுதி நீர்ப்பரப்பால் சூழப்பட்டுள்ளதாலும், ஜனநெருக்கடியான இடங்கள் குறைவாக உள்ளதாலும் இந்த செயற்கைக்கோளின் சிதைவுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்ற நம்பிக்கையில் தாங்கள் செயல்பட்டு வருவதாக வானியல் பத்திரிகை ஆசிரியரான டேவிட் எய்ஷர் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.