அதிர்ச்சியில் ஆழ்த்தும் கில்லாடி சிறுமி

Written by vinni   // February 17, 2014   //

faith_jockson_uk_001பிரிட்டனைச் சேர்ந்த ஃபெய்த் என்ற 9 வயது சிறுமி புத்தகங்கள் படிப்பதில் உள்ள அதீத விருப்பத்தின் காரணமாக 7 மாதங்களில் 364 புத்தகங்களைப் படித்து முடித்துள்ளார்.

சேஷைர் மாகாணத்தில் உள்ள ஆஷ்லி நகரைச் சேர்ந்த அந்தச் சிறுமி தொலைக்காட்சியிலும், கணனிகளிலும் பொழுதைக் கழிக்காமல், ரோல்ட் டால் போன்ற எழுத்தாளர்களின் நாவல்கள், ஹாரி பாட்டர் கதைகள் போன்ற புத்தகங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

தொடக்கப்பள்ளி நிலையில் ஆசிரியர்களின் உந்துதலால் வாசிக்கும் பழக்கத்தை அதிகரித்துக் கொண்டுள்ள அச்சிறுமி, மிருகங்கள், மாயாஜாலங்கள் மற்றும் சாகசங்கள் நிறைந்த புத்தகங்களையே அதிகம் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி மற்றும் கம்ப்யூட்டர்களை விட புத்தகங்களே கற்பனைத் திறனை அதிகரிப்பதாக ஃபெய்த்தின் தாயார் லாரன் தெரிவித்துள்ளார்.

முழு நேரமும் புத்தகத்தையே படிக்காமல் ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள், கராத்தே மற்றும் டிரம்ஸ் இசைப்பது போன்ற கலைகளைக் கற்று வருவதாகவும் ஃபெய்த் தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.