உணவுகளை புகைப்படம் எடுக்காதீர்கள்

Written by vinni   // February 17, 2014   //

Assorted healthy food.பிரான்சில் உணவுகளை புகைப்படம் எடுத்து வலைதளங்களில் போடுவதை அந்நாட்டு சமையற்காரர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.

பிரான்சில் உள்ள ஹோட்டல்களில் பரிமாறப்படும் விதவிதமான உணவு வகைகள் அதிகளவில் புகைப்படம் எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்கில் போடப்பட்டு வருகிறது.

இதனால் பிரபல ஹோட்டலைச் சேர்ந்த மூன்று தலைமை சமையல்காரர்கள் இச்செயலுக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து தமது ஹோட்டலில் ஸ்மாட்போனுடன் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளனர்.

ஏனெனில் ஸ்மாட்போன் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் மிக தெளிவாக இருப்பது இல்லை என்றும் இதனை சமூக வலைதளங்கில் போடுவதன் மூலம் மற்ற வாடிக்கையாளர்களின் எதிர்ப்பார்ப்புகள் குறைந்துவிடுகிறது எனவும் கூறியுள்ளனர்.

இது போன்ற சம்பவங்கள் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்திலும் நடந்து வருவது குறிப்பிடதக்கது.


Similar posts

Comments are closed.