அமெரிக்கர்களின் முட்டாள்தனம்

Written by vinni   // February 17, 2014   //

sunஅமெரிக்காவில் நான்கில் ஒரு பங்கு மக்கள் பூமி சூரியனை சுற்றி வருகிறது என்ற அடிப்படை விவரம் கூட தெரியாமல் இருப்பதாக கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள அர்லிங்டன் பகுதியில் இருக்கும் தேசிய அறிவியல் நிறுவனம்(National Science Foundation) அமெரிக்கர்களிடையே கருத்துகணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

இதில் மொத்தம் 2,200 பேர் கலந்துக்கொண்டனர்.இவர்களிடம் இயற்பியல், உயிரியல் குறித்து 10 கேள்விகள் கேட்கப்பட்டதில் சரசரியாக 6.5 மதிப்பெண்களை பெற்றனர்.

இக்கருத்துகணிப்பின் மூலம் 74 சதவீதமான பேருக்கு பூமி சூரியனை சுற்றி வருகிறது என்பது தெரியவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 48 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே மனிதன் விலங்கில் இருந்து வந்தது தெரிந்துள்ளது மற்றும் 90 சதவீதம் பேர் மருத்துவ கண்டுபிடிப்புகள் குறித்து தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.


Similar posts

Comments are closed.