அதிரடி மாற்றத்திற்கு உட்படும் பேஸ்புக் வசதி

Written by vinni   // February 16, 2014   //

facebook_001பேஸ்புக் கணக்கு ஒன்று உருவாக்கும் போது குறித்த பயனர் என்ன பால் என்பதை தெரிவு செய்வது கட்டாயமாகும்.

எனினும் இதுவரை காலமும் இந்த வசதியில் ஆண் அல்லது பெண் என்று இலகுவாக தெரிவு செய்யும் வசதி தரப்பட்டிருந்தது.

ஆனால் திருநங்கைகள் பேஸ்புக் கணக்கினை உருவாக்கும்போது இவ்வசதியில் பிரச்சினை ஏற்படுவதனால் பேஸ்புக் நிறுவனம் தனது வியாபார வலையமைப்பு நிறுவங்களுள் ஒன்றான LGBT உடன் இணைந்த மேற்கொண்ட கலந்துரையாடலின்படி இதற்கான மாற்று வசதியினை அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது.

இதன்படி உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ள அந்நிறுவனம் Male (He/His), Female (She/Her) அல்லது Neutral (They/Their) என்றவாறு தெரிவு செய்யும் வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது.


Similar posts

Comments are closed.