அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி

Written by vinni   // February 16, 2014   //

australia_win_004அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட்போட்டியில் அவுஸ்ரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 397 ஒட்டங்களைக் குவித்தது.

இதில் மார்ஸ் 148 ஒட்டங்களையும் சிமித் 100 ஒட்டங்களையும் அதிகப்படியாக பெற்றுக்கொடுத்தனர்.

தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சில் ஸ்டெயின் அதிகப்படியாக 4 இலக்குகளை வீழ்த்தினார்.

தனது முதலாவது இன்னிங்ஸிற்க்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி அனைத்து இலக்குகளையும் இழந்து 206 ஒட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதில் அதிகப்படியாக ஏபி டி வில்லியர்ஸ் 91 ஒட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் அவுஸ்ரேலிய அணி சார்பாக ஜோன்சன் மிகவும் சிறப்பாக பந்து வீசி 7 இலக்குகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து தனது இரண்டாவது இனிங்ஸிற்க்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 290 ஒட்டங்களைப் பெற்ற நிலையில் தனது ஆட்டத்தை இடைநிறுத்தியது. இதில் வார்ணர் 115 ஒட்டங்களை அதிகப்படியாக பெற்றார்.

481 என்ற வெற்றி இலக்கை நோக்கி தனது 2வது இனிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 200 ஒட்டங்களுக்கு ஆட்டமிழந்து 281 ஒட்டங்களால் தோல்வியடைந்தது.

தென்னாபிரிக்காவின் 2வது இனிங்ஸில் ஏபி டி வில்லியர்ஸ் 48 ஒட்டங்களை அதிகப்படியாக பெற்றார்.

அவுஸ்ரேலிய அணியின் பந்து வீச்சில் முதல் இனிங்ஸைப் போலவே இரண்டாவது இனிங்ஸிலும் சிறப்பாக பந்து வீசிய ஜோன்சன் 5 இலக்குகளைக் கைப்பற்றினார்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் அவுஸ்ரேலிய அணி 1 – 0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது.


Similar posts

Comments are closed.