இங்கிலாந்து பயிற்றுவிப்பாளராக கொலிங்வூட் நியமனம்

Written by vinni   // February 16, 2014   //

paul_collingwood_001மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷில் நடைபெறவுள்ள ஐசிசி உலக கிண்ண இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து பயிற்றுவிப்பாளர் அணியில் போல் கொலிங்வூட் சேர்க்கப்பட்டுள்ளார்.

டேஹாம் அணியின் சகலதுறை வீரரான 37 வயது போல் கொலிங்வூட், 68 டெஸ்ட் போட்டிகளிலும் 197 ஒரு நாள் சர்வதேச போட்டிகளிலும் 35 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

கரிபியன் தீவுகளில் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 போட்டிகளை இங்கிலாந்து வெற்றிபெற்ற போது அணியின் கப்டனாக போல் கடமையாற்றினார்.

போல் கொலிங்வூட் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய சகல அணிகளுக்கும் வழங்கிய உற்சாகத்தை இங்கும் எதிர்பார்ப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட்டின் முகாமைத்துவ பணிப்பாளர் போல் டவுன்ரொன் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.