பேஸ்புக் மூலம் சில நிமிடங்களில் பல லட்சம் நண்பர்கள்

Written by vinni   // February 16, 2014   //

facebook_logoஅமெரிக்காவில் 10 வயது சிறுவன் பேஸ்புக் மூலம் சில நிமிடங்களிலேயே 13 லட்சம் நண்பர்களை பெற்றுள்ளான்.

அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தை சேர்ந்த 10 வயது சிறுவன், மனஇறுக்க நோயால் பாதிக்கப்பட்டதால் நண்பர்கள் யாரும் இல்லாது தனிமையில் தவித்தான்.

இதனால் கவலையுற்ற அவனது தாயார் ஜெனிபர் ஹன்னிகம் தனது மகனின் 10வது பிறந்தநாளில் அவனுக்கு நண்பர்களை பரிசாக கொடுக்க வேண்டும் என எண்ணினார்.

இந்நிலையில் தற்போதைய காலக்கட்டத்தில் நட்பு வட்டாரத்தை பெருக்கிக்கொள்ள வரப்பிரசாதமாக கிடைத்துள்ள பேஸ்புக் வலைதளத்தில், தனது மகனுக்காக தனி பக்கத்தை உருவாக்கி, அதில் அவனது நோய் குறித்தும், அவனுக்கு நண்பர்களே இல்லை என்ற தகவலையும் குறிப்பிட்டிருந்தார்.

இதை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே அவனுக்கு 13 லட்சம் நண்பர்கள் கிடைத்ததால் அச்சிறுவன் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளான்.


Similar posts

Comments are closed.