‘ குச்சியை’ பிடிக்க கோவணத்துடன் திரண்ட பக்தர்கள்

Written by vinni   // February 16, 2014   //

lucky_sticks_005ஜப்பானில் சாமியார் வீசும் ‘அதிர்ஷ்ட குச்சி’யை பிடிக்க கோவணத்துடன் 9 ஆயிரம் பேர் குவிந்துள்ளனர்.

ஜப்பானின் ஓக்கயாமா பகுதியில் 500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமையான சைடைஜி கோவில் உள்ளது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ’ஹடாகா மட்ஸுரி’ என்னும் நிர்வாண திருவிழா நடைபெறும்.

ஜப்பான் முழுவதும் மிகவும் பிரசித்தியான இத்திருவிழாவில் பங்கேற்பவர்கள் சிறிய வெண்ணிற கோவணத்தை மட்டும் கட்டிக் கொண்டு ரத்தத்தை உறைய வைக்கும் குளிர்ந்த நீரூற்றில் குளிக்க வேண்டும்.

இதன் மூலம் உடலும், உள்ளமும் புனிதம் அடையும் என்பது ஐதீகம்.

இதன்பின் பக்தர்கள் திரண்டிருக்கும் கிணறு போன்ற ஒரு கூடத்தின் மேற்புறம் உள்ள ஜன்னல் மாடத்திலிருந்து சாமியார் அதிர்ஷ்ட குச்சிகளை, பக்தர்களை நோக்கி தூக்கி வீசுவார்.

இதை பிடிப்பவர்கள் அந்த ஆண்டு முழுவதும் செல்வ செழிப்புடன், எவ்வித துன்பமும் இல்லாமல் வாழ்வார்கள் என்பது அப்பகுதி மக்களிடையே நீண்டகால நம்பிக்கையாக உள்ளது.


Similar posts

Comments are closed.