ஜேர்மன் கொடியை விபச்சாரமாக்கிய சீனா

Written by vinni   // February 16, 2014   //

german_flag_002ஜேர்மன் நாட்டின் தேசிய கொடியை சீனா இழிவுப்படுத்தும் வகையில் சித்தரித்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஜேர்மனியின் தேசிய கொடி கருப்பு,சிகப்பு மற்றும் மஞ்சள் ஆகிய மூன்று நிறங்களை கொண்டது. அந்நாட்டு மக்களை பொருத்தவரையில் கருப்பு இருண்ட காலத்தையும், மஞ்சள் வளமையான வருங்காலம் இருக்கும் என்பதையும் ,சிகப்பு நிறம் போராட்டத்தில் அவர்கள் சிந்திய இரத்ததை நினைவுப்படுத்தும் வண்ணமாக அமைந்துள்ளது.

ஆனால் இக்கொடி சீனாவில் செக்ஸ் வர்த்தகத்தின் அடையாளமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

சீனா மக்களின் கண்ணோட்டத்தின் படி, கருப்பு நிறம் ஊழலுக்கும், சிகப்பு போராட்டத்திற்கும் மற்றும் மஞ்சள் விபச்சாரத்திற்கு அடையாளமாகவும் கருதப்படுகிறது.

இக்கொடியை, சீன அரசு செக்ஸ் வர்த்தகத்திற்கு தடை விதித்திருந்த போதிலும், இம்மூவர்ண கொடி அரசாங்கத்திற்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த கொடியை அடையாளமாக வைத்திருந்த மொத்தம் 18,000 சீனர்கள் வீட்டில் சோதனை செய்யப்பட்டதில் 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சீனாவின் டோங்குவான் மற்றும் குவாங்டோங் ஆகிய நகரங்களின் விபச்சார விடுதிகளிலும் சோதனை செய்யப்பட்டது.


Similar posts

Comments are closed.