இளைஞர்களுக்கு சமாதானத்தையும் தொழில்வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்ராஜபக்சே

Written by vinni   // February 16, 2014   //

president_mahinda_rajapaksaஇலங்கையின் முதலாவது இளைஞர் கொள்கையை வெளியிடும் நிகழ்ச்சி கொழும்பு சுகதாச விளையாட்டரங்கில் நடந்தது.

இதில் கலந்து கொண்ட இலங்கை அதிபர் மகிந்திராஜபக்சே பல வருடங்களாக இலங்கையில் காணப்பட்ட யுத்தத்தை முடிவுறுத்தி, வடக்கு இளைஞர்களுக்கு சமாதானத்தை வழங்கியதைப் போலவே, லட்சக்கணக்கான பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பை வழங்கவும் தமது அரசாங்கத்தால் முடிந்துள்ளது. என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வடக்கை போல் தெற்கு இளைஞர்களுக்கும் ரத்தம் சிந்த வேண்டிய நிலைமை இல்லாத நாட்டை கட்டி எழுப்பி இருப்பதாக தெரிவித்தார். கடந்த பல வருடங்களாக உரிய தேர்ச்சி இல்லாமல், வெளிநாடுகளில் கூலித் தொழிலாளர்களாக பணியாற்றி வந்த இளைஞர்கள் இன்று, தேர்ச்சிப் பெற்றவர்களாக வெளிநாடுகளில் பணியாற்றுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


Similar posts

Comments are closed.