ஏழு மாதங்களுக்குள் 364 புத்தகங்களைப் படித்து முடித்துள்ள 9 வயது சிறுமி

Written by vinni   // February 16, 2014   //

Academic-books-San-Francisco1-1024x768இங்கிலாந்து நாட்டின் செஷயர் பிரிவின் ஆஷ்லே பகுதியில் ஃபெயித் என்ற 9 வயது சிறுமி வசித்து வருகிறாள். இந்த வயதில் உள்ள மற்ற குழந்தைகள் கம்ப்யூட்டர் விளையாட்டுகளிலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ பொழுதைக் கழிக்க விருப்பப்படும்போது ஃபெயித் புத்தகங்கள் படிப்பதில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றாள்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நேரடியாகத் தெரிவதைவிட தான் கற்பனையை உபயோகிக்க வேண்டியிருப்பது படிப்பதை மேலும் சுவாரஸ்யமாக்குகின்றது என்று அவள் தனது தாயாரிடம் கூறியுள்ளாள்.

பெரியவர்களுக்கான ரோல்ட் டஹல் நாவலாக இருந்தாலும் சரி, சிறியவர்களுக்கான ஹாரி பாட்டராக இருந்தாலும் சரி அனைத்தையும் அந்த சிறுமி படித்து விடுகின்றாள்.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் படிக்கச் சொல்லி தூண்டியதால் தனக்கு இந்த ஆர்வம் சிறிய வயதிலேயே வந்துவிட்டது என்று குறிப்பிடும் ஃபெயித் ஏழு மாதங்களுக்குள் 364 புத்தகங்களைப் படித்து முடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலங்குகள், மந்திரம் அல்லது சாகசங்கள் நிரம்பிய புத்தகங்களைப் படிப்பது தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறும் இந்த சிறுமி படிப்பது மட்டுமில்லாமல், வாரத்தில் நான்கு முறை ஜிம்னாஸ்டிக்ஸ் வகுப்புகள், கராத்தே பயிற்சிகள், நெட்பால் விளையாட்டு மற்றும் டிரம்ஸ் வாசிக்கக்கூட பழகிக் கொண்டிருப்பதாகக் கூறி அனைவரையும் அசத்துகின்றாள்.


Similar posts

Comments are closed.