வெலிங்டன் டெஸ்ட்: இந்தியா முன்னிலையில்

Written by vinni   // February 15, 2014   //

shikhar_dhawan_001நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரகானே, டோனி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்திய அணி முன்னிலை பெற்றது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இந்திய அணி தொடரில் 0–1 என பின்தங்கியுள்ளது. இரண்டாவது டெஸ்ட் வெலிங்டனில் நடக்கிறது.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 192 ஓட்டங்களை பெற்றது. முதல் நாள் ஆட்டமுடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 100 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தவான் (71), இஷாந்த் சர்மா (3) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடக்கிறது.

இஷாந்த் 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சவுத்தி பந்தில் ஆழ்டமிழந்தார் தவான் (98) சத வாய்ப்பை இழந்தார். ரோகித் ஓட்டம் எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார். கோஹ்லியும் 38 ஓட்டங்களில் திரும்பினார்.

பின் இணைந்த ரகானே, தோனி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நீஷம் பந்துவீச்சில் இரண்டு பவுண்டரி அடித்த, ரகானே அரை சதம் எட்டினார். தன் பங்கிற்கு டோனியும் அரை சதத்தை பதிவு செய்தார். உணவு இடைவேளைக்குப்பின், இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 318 ஒட்டங்கள் எடுத்து, 126 ஓட்ட கணக்கில் முன்னிலையில் உள்ளது.


Similar posts

Comments are closed.