புகைப்படங்கள் வெளியாகவில்லையே! மனைவியை பிரிகிறார் மிஸ்டர் பீன்?

Written by vinni   // February 15, 2014   //

mr_bean_002மிஸ்டர் பீனின் மணவாழ்க்கையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிஸ்டர் பீன் என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தின் மூலம் இங்கிலாந்து நாட்டில் பிரபலமானவர் ராவன் செபாஸ்டின் அட்கிசன், இவரது மனைவி சுனேந்தரே சாஸ்த்ரி.

இவர்கள் இருவரும் அனைத்து கலைநிகழ்ச்சிகளுக்கும் ஒன்றாகவே கலந்துகொள்வர். ஆனால் 2012ம் ஆண்டுக்கு பின்னர், அவர்கள் இருவரும் இணைந்து காணப்படும் புகைப்படங்கள் எதுவும் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை. இதன் காரணமாகவே இந்த சந்தேகம் வலுத்துள்ளது.

2012ம் ஆண்டுக்கு பின்னர் இடையில் அவர்கள் இருவரும் உறவினர் ஒருவரின் திருமண வைபவத்தில் பங்கேற்றிருந்தனர்.

மிஸ்டர் பீன், சுனேந்தரே சாஸ்த்ரி ஆகியோருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் திருமண வாழ்க்கையில் இணைந்து 23 வருடங்கள் ஆகின்றன.


Similar posts

Comments are closed.