இத்தாலியின் புதிய பிரதமராக இள வயதானவர் தெரிவு

Written by vinni   // February 15, 2014   //

matteo_renzi_001இத்தாலி நாட்டின் பிரதமராக பிளாரென்சோ மேயரும் இளம் வயதுடையவருமான மேட்டியோ ரென்சி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய அரசமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையிலேயே அம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்த என்றிகோ லெட்டா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதை தொடர்ந்து ஜனாதிபதி ஜார்ஜியோ நேபாலிடானோ, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

தீவிர பரிசீலனைக்கு பின் அந்நாட்டின் பிரதமராக மத்திய-இடது ஜனநாயக கட்சியை சேர்ந்த 39 வயதான ரென்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாக தெரியவந்துள்ளது.

அந்நாட்டின் நிதிநிலைமை கடும் வீழ்ச்சிக்குள்ளானதே லெட்டா பதவி விலகுவதற்கு முக்கிய காரணமாகும். வீழ்ந்து கிடக்கும் அந்நாட்டு பொருளாதாரத்தை ரென்சி சீரமைத்து முன்னேற்றுவார் என்று அந்நாட்டு மக்கள் நம்புகிறார்கள்.


Similar posts

Comments are closed.