ஜெனிவா காய்ச்சலின் வேகம் – செல்வரட்னம் சிறிதரன்

Written by vinni   // February 15, 2014   //

sritharanஐநாவின் மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடருக்கான நாள் நெருங்க நெருங்க, ஜெனீவா காய்ச்சலின் வேகமும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகக் கூறப்படுகின்றது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும் என வலியுறுத்தி மூன்றாவது முறையாக இலங்கைக்கு எதிராக அமெரிக்கா இந்தக் கூட்டத்தில் பிரேரணை கொண்டு வருவதற்கான ஆயுத்தங்களைத் துரித கதியில் மேற்கொண்டு வருகின்றது. எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு, சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற்று, இந்தப் பிரேரணையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளிலும் அமெரிக்கா ஈடுபட்டிருக்கின்றது.

கடந்த இரண்டு முறைகளிலும் பார்க்க, இம்முறை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்பில் இருந்து வெளிப்படையாகவே இந்தப் பிரேரணைக்கு உரமூட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது, மோசமான மனித உரிமை மீறல்கள் இட்பெற்றிருக்கின்றன, அதிலும் குறிப்பாக இனப்படுகொலை இடம்பெற்றிருக்கின்றது என்ற தோரணையில் கருத்துக்கள் இம்முறை மிகவும் துணிகரமான முறையில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இறுதி யுத்தத்தின்போது, விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருந்த மிகமோசமான இராணுவ நடவடிக்கையின்போது, யுத்த பிரதேசத்தில் சிக்கியிருந்த சிவிலியன்களின் பாதுகாப்பு குறித்து உரிய கவனம் செலுத்தவில்லை என்று ஐநாவும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் வெளிப்படையாகவே ஆரம்பத்திலிருந்தே குற்றம் சுமத்தி வந்திருக்கின்றன. சர்வதேச நாடுகளும் படிப்படியாக இந்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்று அங்கீகரிக்கவும், அதுபற்றிய தமது அக்கறைகளையும் வெளிப்படுத்தியிருந்தன.

ஆயினும் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பிலிருந்து உரமான முறைப்பாடுகளோ அல்லது இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதரவு குரல்களோ எழுந்திருக்கவில்லை. யுத்தம் முடிவுக்கு வந்தபின்னரும், யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் இராணுவத்தினர் தொடர்சசியாக நிலைநிறுத்தப்பட்டு, முழுமையானதோர் இராணுவச் சூழல் நிலவியதனால், உயிரச்சம் காரணமாக அங்கு மௌனம் அனுட்டிக்கப்பட்டிருந்தது. மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தன, இனப்படுகொலை இடம்பெற்றிருந்தது என்று வெளிப்படையாகக் கூறுவதற்குப் பாதிக்கப்பட்ட பொதுமக்களோ அல்லது, அந்த மக்களின் அரசியல் தலைவர்களோ அப்போது, துணிந்து முன்வரவில்லை. ஐநூவின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்ற ஜெனீவாவு;க்குச் செல்வதற்குக் கூட, பாதிக்கப்பட்ட மக்களின் அரசியல் பிரதிநிதிகள் அல்லது அரசியல் தலைவர்கள் என்ற ரீதியில் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் தயக்கம் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இம்முறை அப்படியல்ல. நிலைமைகள் மாறியிருக்கின்றன. அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவாக சர்வதேச அமைப்புக்கள் மற்றும் சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் இந்த அரசியல் தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றார்கள். இதற்காக முன்கூட்டியே வெளிநாடுகளில் ஆதரவு தேடும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டிருக்கி;ன்றார்கள். இந்த வகையில் வடமாகாண சபையும்கூட, தனது சார்பில் உறுப்பினர் அனந்தி சசிதரனை முன்கூட்டியே அங்கு அனுப்பி வைத்திருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் ஏற்கனவே அங்கு சென்றிருக்கின்றனர். இதைவிட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் குழுவொன்று ஜெனீவாவுக்குப் புறப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது,

இறுதி யுத்தத்தின்போது, இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பு நடத்தப்பட்டிருந்தது என்று சுட்டிக்காட்டும் பிரேரணைகள் வடமாகாண சபையில் கொண்டு வரப்பட்டபோது, இலங்கையின் சட்டத்துறையில் பழுத்த அனுபவம் பெற்றுள்ள நீதியரசராகிய முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன், இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு என்ற பதங்கள் ஆழமான அர்த்தங்கள் பொதிந்தவை. எனவே, ஆதாரங்களின்றி அவற்றைப் பயன்படுத்த முடியாது, என குறிப்பிட்டு, தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக இலங்கையில் இழைக்கப்பட்டுள்ள போர்க்குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றங்கள், இனச் சுத்திகரிப்பு, இனப்படுகொலைக்கு ஒப்பானது என்று சொல்லப்படும் மனிதப்படுகொலைகளை விசாரணை செய்வதற்காக பக்கசார்பற்ற பன்னாட்டு விசாரணையை ஐநாவின் துணையுடன் உருவாக்க வேண்டும் என்ற திருத்தத்துடன் அந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற உள்ளக விசாரணைகளும், விசாரணைப் பொறிமுறையும் நம்பிக்கைக்கு உரியவை அல்ல. ஏனென்றால் குற்றம் சுமத்தப்பட்டவர்களான இராணுவத்தினர் கலந்து கொள்கின்ற விசாரணைகளாக விசாரணைப் பொறிமுறைகளாக அவைகள் இருக்கின்றன என்பதும் இ;ந்தப் பிரேரணைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

களத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சி
இறுதி யுத்தத்தின்போது, போர்க்ளூகுற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன. இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பு இடம்பெற்றிருக்கின்றன என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இருந்தும் ஒருசில சர்வதேச அமைப்புக்களிடமிருந்துமே ஆரம்பத்தில் இலங்கை அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன. ஐநாவும் இத்தகைய சாரப்பட குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தது. எனினும், புலத்தில் இருந்து எழுந்த கடும் தொனிக்கு ஒத்ததாகவோ அல்லது ஆதரவாகவோ உடனடியாக களத்தி;ல் – இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் யுத்;தம் நடைபெற்ற பிரதேசங்களில் இருந்து குரல்கள் வெளிவரவில்லை.

இறுதி யுத்தத்தின்போது என்ன நடந்தது என்பதுபற்றி, தமிழ்த்தேசிய சுட்டமைப்பினர் தெளிவாக உணர்ந்திருந்தும், அறிந்துமிருந்த போதிலும். அரசாங்கத்திற்கு எதிராக – நேரடியாக இத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைக்காமல் அமததி வாசிக்கின்ற ஒரு போக்கைக் கடைப்பிடித்திருந்தனர். அரசாங்கத்தின் முகத்தை முறிக்கக் கூடாது. அவ்வாறு முறிப்பது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்ற வகையில் ஒரு மென்மைப் போக்கையே பின்பற்றியிருந்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கிய உயர் மட்ட கூட்டத்தில்கூட, மனித உரிமை மீறல்கள் பற்றியோ அல்லது இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை பற்றியோ பேசப்படவில்லை. இத்தகைய வார்த்தைப் பிரயோகங்களைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பொது இடங்களில் பேசுகையில் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் தலவர்கள் அறிவுரைகூட வழங்கியிருந்தார்கள்.
காலை பத்துமணி முதல் மாலை ஆறு மணிவரையில் எட்டு மணித்தியாலங்கள் ஒரே தொடர்ச்சியாக நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் சம்பந்தனையும், விக்னேஸ்வரனையும் பேச்சுக்கள் நடத்துவதற்கு வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அழைத்திருந்த விடயம் தொடர்பாகவே, மிகவும் முக்கியமாக, ஆராயப்பட்டதாக செ;ய்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அரசாங்கம் நியமித்துள்ள தற்போதைய பாராளுமன்ற தெரிவிக்குழு நம்பகத்தன்மை அற்ற ஒரு முறைமை என்றும், அதன் மூலமாக ஒரு நியாயமான அரசியல் தீர்வை அடைய முடியாது, எனவே, காலப்போக்கில் நிலைமைகளை அவதானித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் கூடி இது சம்மந்தமான முடிவுகளை எடுக்கும் என்று அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவே செய்தியாளர்களிடம் கூறப்பட்டது.

தமிழ்;த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினரக்ள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேசிய மாநாடாக இந்தக் கூட்டம், ஏற்பாட்டாளர்களினால் வர்ணிக்கப்பட்டிருந்தது. அந்த அளவிற்கு முக்கியத்துவம் மிக்க ஒரு சந்திப்பாக அந்தக் கூட்டம் நடைபெற்றிருந்தது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய தலைவர் ஆர்.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் அரசாங்கத்தை அனுசரித்துச் செல்கின்ற போக்கிலான தொனியில் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். எனினும் மாகாண சபை உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் அனுசரித்துப் போகின்ற போக்கினை வன்மையாக எதிர்த்திருந்ததுடன், அரசாங்கம் அமைத்துள்ள தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளக் கூடாது என்ற கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்தியிருந்தனர்.

இத்தகைய ஒரு பின்னணியில்தான் ஒரு மாதம் கடந்த நிலையில் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற வடமாகாண சபைக் கூட்டத்தில் இறுதி யுத்தத்தின்போது இலங்கையில் இனப்படுகொலை – இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன என்றும், இவை தொடர்பாக விசாரணை செய்வதற்காக பக்கசார்பற்ற பன்னாட்டு விசாரணையை ஐநாவின் துணையுடன் உருவாக்க வேண்டும் என்று அனைத்துலக சமூகத்தைக் கோருவதாகவும் எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதே கூட்டத்தில் மாகாண சபையின் சார்பில் ஐநாவின் மனித உரிமைப் பேரவை கூட்டம் நடைபெறும்போது, ஜெனீவாவுக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனை அனுப்பி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இப்போது அவர் அங்கு சென்றடைந்திருக்கின்றார்.

மனித உரிமை மீறல் விடயத்தில் அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என வலியுத்தும் போக்கில் களத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் குறித்து, சர்வதேச நாடுகள் கவனம் செலுத்தியிருப்பதை இப்போது காண முடிகின்றது. குறிப்பாக நோர்வே இதுவிடயத்தில் கூடிய அக்கறை காட்டியிருப்பதை, இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிரெட்டே லொஹன் அம்மையார் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்டிருந்த இரண்டு நாள் விஜயத்தின் போது வெளிப்படுத்தியிருக்கின்றார்.

பொறுப்பு கூறுதலா, மாகாண வடமாகாண சபையின் தடைநிங்கிய செயற்பாடுகளா – எது முக்கியம்?

மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகி 29 ஆம் திகதி வரையில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐநாவின் மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடருக்கான நாட்கள் நெருங்க நெருங்க, சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகள் வட இலங்கையின் நிலைமைகளை நாடிப்பிடித்து அறிவதில் அதிக அக்கறை செலுத்தி வருவதைக் காண முடிகின்றது. இதேபோன்று ஐநா மன்றமும் பொருளாதார அபிவிருத்திப் பணிகளுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகம் ஹாஓலியங் சூவை வடபகுதிக்கு அனுப்பி பலதரப்பட்டவர்களிடமும் கருத்துக்களைத் திரட்டியிருக்கின்றது. இந்த வகையில் அண்மைய நாட்கள் யாழ்ப்பாணம் இந்த இராஜதந்திரிகளின் விஜயத்தினால் களைகட்டியிருந்தது.

வடமாகாண ஆளுனர், வடமாகாண முதலமைச்சர், யாழ் ஆயர், சிவில் சமூகத்தினர், யாழ் அரசாங்க அதிபர் உள்ளிட்ட பல தரப்பட்ட முக்கியஸ்தர்களையும் இவர்கள் குறிப்பாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் சந்தித்திருக்கின்றார்.

இந்தக் சந்திப்புக்களின்போது, அரசுக்கும் வடமாகாண சபைக்கும் இடையில் நிலவுகின்ற அரசியல் மற்றும் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பிலான முரண்பாடுகள் பற்றியும், இவ்விரு தரப்பினரும் இணநை;து செயலாற்ற வேண்டியதன் அவசியம், அதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது.
அத்துடன், யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகத்தை ஆயர் இல்லத்தில் வைத்துச் சந்தித்த இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிரெட்டே லொஹன் அம்மையார், வடமாகாண சபையின் செயற்பாடுகள் திருப்தியளிக்கும் வகையில் இருக்கின்றதா என்று வினவியிருக்கி;ன்றார். அத்துடன், போர்க்குற்றச்சாட்டுக்கள், மனித உரிமை மீறல்களுக்கான விசாரணைகளைக் கோருவது யார்? பொதுமக்கள் கோருகின்றார்களா இதில் அக்கறை காட்டுகின்றார்களா அவர்கள் என்ன நினைக்கின்றார்கள், அவர்களுடைய நிலைப்பாடு என்ன என்பதைத் துருவித்துருவி விசாரித்து அறிந்;திருக்கின்றார்.

இதற்குப் பதிலளித்த யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம், வடமகாhணசபைக்கும், அரசுக்கும் இடையில் முறுகல் நிலையே தொடர்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார். அத்துடன், இருதரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டியதன் தேவை அவசியம் பற்றியும் எடுத்துக் கூறியிருக்கின்றார். போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூறுதல் தொடர்பில் இங்குள்ள பத்திரிகைள், ஊர் முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என்று எல்லா தரப்பினருமே ஆர்வம் கொண்டிருப்பதாக யாழ் ஆயர் நோர்வே தூதுவருடனான சந்திப்பின்போது குறிப்பிட்டிருக்கின்றார். உள்நாட்டில் மட்டுமல்ல வெளியிலும் இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதைப் பொதுமக்களும் மற்றவர்களும் விரும்புகின்றார்கள் என்பதையும் யாழ் ஆயர் எடுத்துக் கூறியுள்ளார்.

இந்த விசாரணைகளின் மூலம் என்ன பயன் கிடைக்கப் போகின்றது என்ற கேள்வியையும் நோர்வே தூதுவர் யாழ் ஆயரிடம் கேட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த ஆயர், ஒருவிசாரணையின் மூலம்தான், காணாமல் போயுள்ளவர்கள் பற்றி, குறிப்பாக குடும்பத்தினரே நேரடியாக இராணுவததினரிடம் கையளித்த தங்கள் இளைஞர்களுக்கு என்ன நடந்தது, அவர்களை அரசு என்ன செய்தது என்பதைத் தெரிந்து கொள்ளவும், அதன் மூலம் மன ஆறுதல் அடையவும் முடியும் என்று தெரிவித்திருக்கின்றார். அத்துடன் இத்தகைய விசாணையொன்றின் மூலம் மட்டுமே நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வழிபிறக்கும் என்பதையும் ஆயர் அவருக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

யாழ் ஆயர் மட்டுமல்லாமல், சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் ஊர்ப் பெரியவர்கள், பிரமுகர்கள் இளைஞர்கள் போன்றோரையும் நோர்வே தூதுவர் தனித்தனியே சந்தித்துப் பேசியிருக்கின்றார். மொத்தத்தில் யாழ் சமூகத்தின் குறுக்கு வெட்டு முகமாகப் பலரையும் சந்தித்து, கலந்துரையாடியிருக்கின்றார். போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொதுமக்களின் உண்மையான மன உணர்வுகள் என்ன, இத்தகைய விசாரணையொன்று அவசியம் என்று ஒருசில அரசியல்வாதிகள், பத்திரிகைகளைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் வலியுறுத்துகின்றார்களா என்பதைக் கண்டறிவதற்கு நோர்வே தூதுவர் தீவிர முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

அதேநேரம், வடமாகாண முதலமைச்சருடனான சந்திப்பினபோது, அரசாங்கத்துடன் வடமாகாண சபை இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பாக கோடிட்டுக் காட்டியிருக்கின்றார். அத்தகைய ஒரு சூழலை உருவாக்குவதற்கும், வடமாகாண சபைக்குப் பொருளாதார நன்மைகளை ஏற்படுத்துவதற்கும் நோர்வே பங்களிப்பு செய்யும் என்பதையும் உறுதிபட அவர் கூறியிருக்கின்றார்.

இதேபோன்று ஐநாவின் உதவிச் செயலாளர் நாயகமும், ஆசிய பசுபிக் பிராந்திய ஐநாவின் அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளருமாகிய ஹாஓலியங் சூ, வடமாகாண முதலமைச்சருடனான சந்திப்பின்போது, அரசாங்கமும், வடமாகாண சபையும் அபிவிருத்திச்; செயற்பாடுகளில் இணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும், அத்தகைய இணைந்த செயற்பாட்டில் ஐநா மன்றமும், ஏனைய சர்வதேச நாடுகளும் ஆர்வம் கொண்டிருப்பதையும் வலியுறுத்தி சுட்டிக்காட்டியிருக்கின்றார். முதலமைச்சரும் தனது பங்கிற்கு அரசாங்கத்துடன் தாங்கள் ஒத்துழைப்பதற்கும், இணைந்து செயற்படுவதற்கும் தயராக இருக்கின்ற போதிலும், அரசாங்கமே ஏற்கனவே தீர்மானித்துள்ள ஒரு நிகழ்ச்சி நிரலின்படி நடப்பதற்கு முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியிருக்கின்றார். அரசாங்கம் தனது நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்வதற்கு வடமாகாண சபைத் தடையாக இருக்கக் கூடாது என்பதற்கான வழிவகைகளயும் மேற்கொண்டிருப்பதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐநா பிரநிதியிடம் எடுத்துக் கூறியிருக்கின்றார்.

ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக இதுவரையிலும் இல்லாத வகையில் ஒரு கடுமையான பிரேரணையைக் கொண்டு வந்து, அதன் மூலம் பொறுப்பு கூறும் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தைத் திமிற முடியாத வகையிலான ஒரு பொறிக்குள் சிக்க வைக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்ற சூழலில் வட மாகாண சபையின் செயற்பாடுகள் அரசும், வடமாகாண சபையும் ஒன்றிணைந்த அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பிலும், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடைய உண்மையான மனநிலைகள் என்பவற்றை கண்டறிவதிலும் சர்வதேசம் முயற்சிகள் மேற்கொண்டிருப்பது, ஜெனிவா மாநாட்டின் தீர்மானம் குறித்து கேள்விகளை எழுப்பியிருக்கின்றன.
இலங்கை அரசாங்சகத்தை சர்வதேச நெருக்கடிக்குள் தள்ள வேண்டியது உண்மையிலேயே அவசியமான ஒரு நடவடிக்கையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

குறிப்பாக சரவ்தேச விசாரணையொன்று இடம்பெறுமானால், அது இலங்கையில் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும் என்று இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதியின் செயலாளர் பிரட்மன் வீரக்கோன் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில் அத்தகைய ஒரு விசாரணைக்கான தேவை குறித்து சர்வதேசம் ஆராய முற்பட்டிருக்கின்றதோ என்று எண்ணத் தூண்டியிருக்கின்றது. அத்துடன் இப்போது போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பு கூறுவது முக்கியமா அல்லது அரசாங்கத்தையும் வடாகாண சபையையும் இணைந்து செயற்படச் செய்து யுதத்தி;னால் அழிந்துள்ள பிரதேசங்களைக் கட்டியெழுப்புவதற்கான அபிவிருத்திச் செயற்பாடுகளுககு ஊக்கம் கொடுப்பது முக்கியமா என்பதைத் தீர்மானிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றதோ என்று எண்ணிப்பார்க்கச் செய்திருக்கின்றது என்றே எண்ண வேண்டியுள்ளது.


Similar posts

Comments are closed.