நான் அணிவது பொய் முடிதான்:

Written by vinni   // February 15, 2014   //

downloadதலையில் தான் அணிவது பொய் முடி என்பதை கூற தான் ஒருபோதும் அஞ்சியதில்லை என பிரபல சிங்களத் திரைப்பட நடிகரும் ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் தலையில் அணிவது பொய் முடிதான். இதனை கூற நான் வெட்கப்படவில்லை. உலகில் உள்ள பிரபல நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், இலங்கையின் விஜயகுமாரதுங்க போன்றோரும் பொய் முடிகளை பயன்படுத்தினர்.

அரசாங்கத்தில் உள்ள பலர் பொய் முடிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நான் பொய் முடியை அணிவதால் வெட்கப்படவில்லை என்றார்.

பிரபலமான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அணிவது பொய் முடி எனவும் அவரது முடியை பொது இடம் ஒன்றில் வைத்து கழற்றி அதனை நாட்டு மக்களுக்கு காண்பிக்க வேண்டும் என அரசாங்கத்தில் உள்ள சிலர் தெரிவித்திருந்தாக செய்திகள் வெளியாகி இருந்தன.


Similar posts

Comments are closed.