பிரபாகரனின் குண்டுக்குப் பயந்து ஓடியவர்கள் உரிமை பற்றி பேசுகின்றனர்: மேதானந்த தேரர்

Written by vinni   // February 15, 2014   //

prabakaran-e1353699527392இலங்கையின் பௌத்த சக்திகளை அழிப்பதற்காக பலவாய்ந்த நாடுகள் மனித உரிமை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவள மேதானந்த தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்திய தூதரகப் பெண் அதிகாரியை நிர்வாணப்படுத்தி அந்த பெண்ணின் மனித உரிமையை மீறிய அமெரிக்கா, தனது பெண் அதிகாரியான நிஷா தேசாய் பிஸ்வால் என்பவரை இலங்கைக்கு மனித உரிமையை கற்றுக்கொடுக்க அனுப்பியது நகைப்புக்குரியது.

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களின் பின்னால் மதவாத சக்தி இருப்பது தெளிவாகியுள்ளது.

பிரபாகரனையும் இப்படியான மதவாத சக்தியே வழிநடத்தியது என்பது தெளிவாக தெரிந்தது. இந்த சக்திகளுக்கு நாட்டுக்கு நன்மை செய்யும் நோக்கங்கள் இல்லை.

நாட்டில் உள்ள பௌத்த சக்திகளை அழிப்பதற்காகவே இலங்கை மீது மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. பிஸ்வால் போன்ற தூதுவர்களுக்கு பந்தம் பிடிக்கும் தேசத்துரோகிகளின் செயற்பாடுகளால் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும்.

பிரபாகரன் குண்டுகளை வீசும் போது நடுங்கி கொண்டு கட்டிலுக்கு அடியில் ஓடி மறைந்து கொண்ட இலங்கையில் உள்ள தேசத்துரோகிகள் தற்போது வெளியில் வந்து மனித உரிமைகள் பற்றி பேசுகின்றனர் என எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.