தென் ஆப்ரிக்காவில் ஐபிஎல் போட்டிகள்

Written by vinni   // February 14, 2014   //

iplஇந்தியாவில் 7வது சீசன் ஐபிஎல் போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் 7வது சீசன் போட்டி வருகிற ஏப்ரல் 9ம் திகதி முதல் ஜூன் 3ம் திகதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல்கள் நிலவுகிறது.

இதனையடுத்து ஐபிஎல் போட்டிகளை எங்கு நடத்தலாம் என்பது குறித்து, நிர்வாக குழு கூட்டம் பெங்களூரில் கலந்து ஆலோசித்தது.

கூட்டம் முடிந்த பின்னர் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல், ஐபிஎல் சேர்மன் ரஞ்சிப் பிஸ்வால் ஆகியோர் கூறுகையில், ஐபிஎல் போட்டியை இந்தியாவில் முழுமையாக நடத்துவதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்.

நாடாளுமன்ற தேர்தல் போட்டி நடைபெறும் காலகட்டத்தில் குறுக்கிட்டு பாதுகாப்பு பிரச்சினை எழுந்தால் தென் ஆப்ரிக்காவில் போட்டியை நடத்தும் திட்டம் உள்ளது.

இந்த வகையில் மேலும் சில வெளிநாடுகளும் பரிசீலனையில் உள்ளது.

உள்துறை மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுடன் விரைவில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.

இந்தியாவில் அதிகபட்ச ஆட்டங்களை நடத்த வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

மத்திய அரசு பச்சைக்கொடி காட்டினால் முழு போட்டியும் இந்தியாவில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.