கால்பந்து அணிகளுக்கான தரவரிசைப் பட்டியல்! ஸ்பெயின் முதலிடம்

Written by vinni   // February 14, 2014   //

imagesகால்பந்து போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு(பிபா) வெளியிட்டுள்ளது.

நம்பர்–1 இடத்தை நடப்பு உலக சாம்பியனான ஸ்பெயின் அணி தக்கவைத்துக் கொண்டது.

அடுத்த இரண்டு இடங்களில் ஜேர்மனி, அர்ஜென்டினா அணிகள் நீடிக்கின்றன, போர்ச்சுகல் அணி 5வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு முன்னேறியது.

இதையடுத்து கொலம்பியா அணி 5வது இடத்துக்கு தள்ளப்பட்டது, இரண்டு இடங்கள் முன்னேறிய சுவிட்சர்லாந்து அணி 6வது இடம் பிடித்தது.

உருகுவே(7வது இடம்), இத்தாலி(8வது இடம்) தலா ஒரு இடம் பின்தங்கின. பிரேசில் அணி 9வது இடத்துக்கு முன்னேறியது, நெதர்லாந்து அணி 10வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இரண்டு இடங்கள் முன்னேறிய இந்திய அணி 156வது இடத்தில் இருந்து 154வது இடத்துக்கு முன்னேறியது, இந்த இடத்தை கயானாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

ஏழு இடங்கள் முன்னேறிய பாகிஸ்தான் அணி 165வது இடத்திலும், இரண்டு இடங்கள் பின்தங்கிய இலங்கை அணி 171வது இடத்திற்கும் தள்ளப்பட்டது.


Similar posts

Comments are closed.