ஐ.நா தலையீட்டுடன் வடக்குப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது!– அரசாங்கம்

Written by vinni   // February 14, 2014   //

United-Nations-Genevaவடக்கின் பிரச்சினைகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலையீட்டுடன் தீர்வு காண முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலையீட்டின் அடிப்படையில் வடக்கு மாகாணசபைக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

வட மாகாணசபைக்கு அதிகாரத்தை வழங்க ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்ய வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், அண்மையில் இலங்கைக்கு வியஜம் செய்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைச் செயலளார் கயான்கீ சூவிடம் கோரியுள்ளார்.

முதலமைச்சரின் இந்தக் கோரிக்கையானது ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆர்2ஜீ என்னும் பிரகடனத்திற்குள் அரசாங்கத்தை சிக்க வைக்கும் சூழ்ச்சி திட்டமாக கருதப்பட வேண்டுமென சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் பிரச்சினைகளுக்கு எந்தவொரு மூன்றாம் தரப்பினையும் ஈடுபடுத்தப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.


Similar posts

Comments are closed.