மெனிக்பாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக அறிக்கை

Written by vinni   // February 14, 2014   //

Internally displaced people (IDP) wait for police to search their bus at a checkpoint on the A-9 road in Vavuniyaஇலங்கை, மெனிக்பாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக போலி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

டாக் என்ற அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான முறையில் இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.

டாக் என்ற அமைப்பு மெனிக்பாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவித்து விசேட அறிக்கை ஓன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த அறிக்கையை ஐரோப்பிய அரச சார்பற்ற நிறுவனமொன்றைச் சேர்ந்த ஹென்ட்ரினா பிரிஸ்கோ என்பவர் தயாரித்துள்ளார்.

பத்தாயிரம் தமிழர்களிடம் சத்தியக் கடதாசி பெற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மூன்றாது அறிக்கை இதுவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


Similar posts

Comments are closed.